
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில், «தமிழின அழிப்பு நினைவு ஊர்திப் பவனி» கடந்த 14 ஆம் திகதி யாழ் நல்லூரிலிருந்து ஆரம்பமாகியது.
இன்று (16.05.2025)வவுனியாவில் பயணித்துக்கொண்டிருக்கிறது.மக்கள் உணர்வெழுச்சியோடு வணக்கம் செலுத்திவருவதோடு,முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கியும் அதனை மக்கள் பருகியும் வருகின்றனர்.









