
12 வருடத்துக்கு முதல் இப்படம் எடுக்கப்பட்டது. நகைச்சுவைக்காக பலரது பாராட்டைப் பெற்ற «துலைக்கோ போறியள்» என்ற எனது குறும்படத்திற்கான இறுதிக் காட்சியை விளக்கிக் கொண்டிருக்கையில் இது எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் வலது புறமிருக்கும் «சின்னவிழிகள்» செல்வம் அண்ணாவும் (பல போர்க்கால படைப்புக்களில் நடித்தவர்) இ இடது புறமிருக்கும் «செல்லா» அண்ணாவும் இன்றும் இவ்வுலகில் இல்லை.
2017 ம் ஆண்டு அந்த நகைச்சுவைக் குறும்படத்தை முழு நீள திரைப்பட கதையாக்கி விட்டு இன்று வரை தயாரிப்பாளர் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறேன். என்றோ ஒரு நாள் தயாரிப்பாளர் கிடைக்கலாம். ஆனால் என் வளர்ச்சியில் அக்கறையோடு சேர்ந்து பணியாற்றிய இவர்கள் இருக்கப் போவதில்லையே.