தமிழ் திரை உலகில் முக்கிய நடிகராக இருக்கும் ரஜினியின் படம் தற்போது 37 வருடங்களுக்கு பிறகு தியேட்டரின் முதல் முறையாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் உண்மையில் அதுதான் நடக்கிறது. இது குறித்தும் போது தகவலை இங்கு பார்ப்போம்.
ரஜினி படம் என்றாலே அதற்கு தமிழ் திரையுலகில் தனி மவுசு இருக்கிறது. காரணம் இன்று வரை ரஜினிகாந்த் அனைவருக்கும் பிடித்தமான சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். சொன்னதுக்கு இவர் படம் வரவில்லை என்றாலே ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிடுவர். அவ்வளவு ஏன், சொன்ன நேரத்திற்கு டைட்டிலோ டீசரோ வரவில்லை என்றாலோ சமூக வலைதளங்களை ஒரு வழி செய்து விடுவர். இந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து ரஜினி நடித்த ஒரு படம் 37 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
என்ன படம்?
ரஜினிகாந்த், தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதைத்தாண்டி இன்னும் சில படங்களில் கேமியோ கதாப்பாத்திரங்களில் வந்திருக்கிறார். இந்த நிலையில், அவர் இந்தியில் 1989ஆம் ஆண்டில் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம், அந்த சமயத்தில் ரிலீஸ் ஆகாமல் போனது. இதற்கு பல்வேறு காரணங்களும் சொல்லப்பட்டது. இப்போது, ஒரு வழியாக 37 வருடங்கள் கழித்து ‘ஹம் மே ஷாஹென்ஷா கோன்’ என்கிற அந்த இந்தி படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படி இதுவரை பார்க்காத ரஜினி படத்தை, புதிதாக திரையரங்குகளில் வெளியிட இருப்பதால் இதைக்காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இது குறித்த ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் நடித்திருப்பவர்கள்..
இந்த இந்தி படத்தில் சத்ருகன் சின்ஹா, ஹேம மாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, ஷரத் சக்சேனா, அம்ரிஷ் பூரி, ஜக்தீப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்கிய ஹர்மேஷ் மக்ஹோத்ராவே இறந்து விட்டார். அதே போல் இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அம்ரிஷ் பூரியும் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
