தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனவர்களின் கோப்பாய் நினைவாலயம் இன்றைய தினம் மாவீரர்களின் உரித்துடையோர்களால் திறந்துவைக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு குறித்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கோப்பாய் துயிலுமில்ல முன் வீதியில் மாவீரர் சேரமான் அவர்களின் புதல்வன் ருசாந்தன் அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன்பின் மாவீரர் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்லறை நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு இறுதியாக
தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் ஈழத்தரசி மற்றும் புலிக்குட்டி ஆகிய மாவீர்களின் தாயார் மலர்ராணி குமாரசாமி அவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்க் வணக்கம் செலுத்தி நினைவாலயம் செய்துவைப்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவாலயத்தில் வருகின்ற 27ம் திகதி மாவீரர் நாள் வரை உறவுகள் வருகை தந்து தங்கள் மாவீரசெல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்துவதோடு எம் இளைய தலைமுறையினரையும் அழைத்துவந்து எம் மறவர்களின் வீர வரலாற்றை கடத்துங்கள் என அனைவரிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மக்கள் உணர்வோடு தமது வணக்கத்தை செலுத்திவருகின்றனர்.








