
எங்கள்; தேசம் விடிவுக்காக
எழுந்து வருவாய் இளைஞா!
தங்கத் தலைவர் தந்த பொறுப்பை
நன்கு உணர்வாய் இளைஞா!
அங்கம் இழந்தோர் ஆகுதியானோர்
கதைகள் அறிவாய் இளைஞா – நீயும்
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் நினைவைச்
சுமந்து எழுவாய் புயலாய்!
அஞ்சும் கோழை நாமும் இல்லை
அறியவைப்பாய் இளைஞா!
அடிமை வாழ்வும் நிலையும் இல்லை
புரிந்துகொள்வாய் இளைஞா!
பெண்ணும் ஆணும் பேதமின்றி
மண்ணைக் காத்து நின்றார் அவர்!
மண்ணைக் காக்கும் பணியில்தானே
தங்கள் உயிரைத் தந்தார் அவர்!
எண்ணம் என்ன என்று அறிந்து
எழுவாய் நீயும் இளைஞா!
பொங்கும் கடலாய்ப் புயல் எழுந்து
புதிய சரித்திரம் படைப்பாய்!
ஆக்கம் ஈழத்து இசைத்தெற்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா.(20.12.2024)
![]()

More Stories
வருங்கால இளைஞரே நீ எழுக?
காதலே! உயிர் மூச்சாகி
அருள்தருவாய் முருகா!