January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

அருள்தருவாய் முருகா!

ஏறுமயில் ஏறி வலம் வரும் முருகா!
எங்கள் குறை அறிந்து நின்று
காத்து நிற்கும் அழகா!
காவலாய் நின்று எம்மைக்
காக்கும் வேலவா!
வேண்டி உந்தன் அடிதொழவே
அருள்தருவாய் முருகா!

மலைமீது அமர்ந்தவனே – எம்
மனமெல்லாம் புகுந்தவனே!
மலர்முகத்துத் திருமகனே!
மதிமுகத்து ஒளியவனே!
வேலோடு வினைதீர்த்து
காட்சிதந்து நிற்பவனே!
வினைதீர வரம்தந்து
எமையாளும் நாயகனே!

தந்தைக்கு மந்திரத்தை
ஓதிநின்ற அருளாளனே!
தமையனாம் கயமுகனின்
அருமைச்சகோதரனே !
ஐயன் உன்னைத் தொழும் வரம்
வேண்டும் எந்நாளும்!
ஆண்டருள்வாய் ஆசிதந்து
எமைக்காப்பாய் எந்நாளும்!

ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா 11.01.2026

Loading

About The Author