
பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
பிரித்தானியா, அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் தனது பயணத்தின் முதற்கட்டமாக பிரித்தானிய தலைநகா் லண்டனுக்கு நேற்று முன்தினம் (4) சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், பிரித்தானிய பிரதமா் கியா் ஸ்டார்மரை சந்தித்தார்.
பின்னா், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சா் டேவிட் லாமியின் ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்துகொண்டவேளை செவனிங் ஹவுஸுக்கு வெளியே ஒன்றுதிரண்ட காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதேவேளை செவனிங் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியே வந்தபோது, பாதுகாப்பு காவலர்களை மீறி வீதிக்கு மத்தியில் வந்த காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர்இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை தாக்க முயற்சித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்த நிலையில், அவர் கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்ததால் பதற்றமான சூழல் நிலவியது