January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த ஆண்டு-அநுர குமார திஸாநாயக்க

இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த ஆண்டு-அநுர குமார திஸாநாயக்க

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரவுக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல கலை கலாசார நிகழ்வுகளினால் இவ்விழா வர்ணமயமாக அமைந்தது.

Loading

About The Author