January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

‘ராப்’ பாடகர் வாகீசன்,அட்விக் ,திசோன், அவர்களின் இரண்டு விழாக்கள் மொன்றியால் மாநகரில்….

உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான

அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பிக்கும் இரண்டு விழாக்கள் மொன்றியால் மாநகரில்….

———————————————————

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான

அட்விக் உதயகுமார் மற்றும் திசோன் விஜயமோகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் இரண்டு விழாக்கள் மொன்றியால் மாநகரில் நடைபெறுகின்றன. அத்துடன் 24-01-2026 சனிக்கிழமை அன்று டுறம் பிராந்தியத்தில் உள்ள DURHAM CONVENTION CENTRE விழா மண்டபத்தில் மூன்றாவது விழா நடைபெறுகின்றது என்ற தகவலும் எமக்குக் கிடைத்துள்ளது.

மொன்றியால் மாநகரில் 18-01-2026 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று பல மொன்றியால் அமைப்புக்கள் இணைந்து நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் விழாவிலும் 23-01-2026 வெள்ளிக்கிழமையன்று மொன்றியால் EYE TAMIL ஊடக நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் EYE TAMIL NIGHT விழாவிலும் இந்த மூன்று அற்புதக் கலைஞர்களும் மேடையில் தோன்றி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தவுள்ளார்கள்.

மொன்றியால் EYE TAMIL NIGHT விழா தொடர்பான விபரங்களுக்கு 514 584 2699 என்னும் இலக்கத்தையும்T தமிழ் மரபுத்திங்கள் விழா தொடர்பான விபரங்களுக்கு 514 360 8511 என்னும் இலக்கத்தையும்

மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் விளம்பர அறிவித்தல்களைப் பார்க்கவும்

————–கனடா உதயன் ஆசிரிய பீடம்

Loading

About The Author