தையிட்டி காணிகளை மீள ஒப்படையுங்கள்! தேரர்கள் வலியுறுத்தல்!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம், தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடமே மீண்டும் ஒப்படைக்குமாறு நாக விகாரை மற்றும் நாகதீப விகாரை விகாரதிபதிகள் நேரடியாக வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இருநாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, நாகதீப மற்றும் நாக விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது விகாரதிபதிகள் இந்த முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர்.
தையிட்டி விகாரையைச் சூழவுள்ள பெருமளவான தனியார் காணிகள் முறையற்ற விதத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தேரர்கள், அவற்றை உரியவர்களிடம் வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
காணி விடுவிப்பு மற்றும் தையிட்டி விவகாரம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாகத் திரும்பியது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தையிட்டி விகாரை விவகாரம் நீண்டகாலமாக யாழ். மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் ஒரு விடயமாகும். குறிப்பாக, மக்களின் பூர்வீக நிலங்கள் விகாரை நிர்மாணத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பௌத்த மதத் தலைவர்களே ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் முக்கியத்துவமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
![]()

More Stories
பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு நாள்
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில்.தேரர்கள் வலியுறுத்தல் ; மௌனமா திரும்பிய ஜனாதிபதி
இளங்குமரனுக்கு நீதிமன்ற அழைப்பு!