– மறவன்புலவு க.சச்சிதானந்தன்
மண்ணால் மனிதனுக்குப் பெருமை, அவ்வாறே மனிதனாலும் மண்ணுக்குப் பெருமை.
எம்மிடை பயன் தரும் பனைகள் பல உள. பனையை நாம் கற்பகதரு எனப் போற்றிப் புகழ்கிறோம்.அத்த கைய பனைக்கு ஒப்பிடக் கூடிய ஒருசிலரே நம் நடுவே வாழ்கின்றனர்.அவர்களுள் ஒருவராகக் கோடிட்டுக் காட்டக் கூடியவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன்.
‘என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதே அவ ரின் தாரகமந்திரம். தமிழுக்கு மட்டுமன்று, சைவத்துக்கும் தொண்டாற்றுகின்ற அவ்வாறான தொருமனிதரைக் கற்பதருவுக்குஒப்பிடுவதில் பெருமை எமக்கே.
பொதுப் பணிக்கு என்ன வேண்டும்?இரவு பகல் என்று பாராது,தொண்டாற்றுகின்ற பக்குவம் வேண் டும். அஃது அவரிடம் உள்ளமுதன்மைமிக்கபண்பு.
மறவன்புலவு க. சச்சிதானந்தன் 1941 திசம்பர் 5 அன்று யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் மு. கணபதிப்பிள்ளை, தங்கம்மா ஆகியோருக்குமகனா கப் பிறந்தவர்.
மறவன்புல வுசகலகலாவல்லி வித்தியாசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் பள் ளிப் படிப்பைமுடித்துக் கொண்டார். 1963ஆம் ஆண் டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இந்தியஅரசின் புலமைப் பரிசில் பெற்று சென் னைப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டத்தை 1966இல் பெற்றார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மீண்டும் ஒரு மாணவனாக ஈராண்டுகள் பட்டமேல் படிப்பு.விலங்கியல் முதன் மைப் பாடம். கடல் உயிரியல் துணைப் பாடம் என அவர் கற்கைகள் நீண்டன.
அப்போது தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1500 இலங்கை மாணவர் கல்விகற்றனர். இலங்கை மாண வர்களுக்கென ஒரு சங்கம். அதற்கு இவரை அழைத்த தோடு 1964 ஆவணியில் அக்கூட்டத்தில் தலைவராக ஒரே மனதாக இவரைத் தேர்ந்தெடுத்தனர்.
யாழ்ப்பாணக் கல்லூரியில் பட்டதாரி மாணவர்க ளுக்கு விரிவுரையாளராகப் பணியாற்றியவர். உள்ளு ராட்சிஅமைச்சராக இருந்தமாண்புமிகு மு. திருச் செல்வத்துக்குத் தனிச் செயலாளராகக் கடமையாற்றி யவர்.கொழும்பில் இலங்கைக் கடற்றொழில் திணைக் களத்தில் அறிவியலாய்வாளராகக் கடல்-சார் அறிவி யல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டவர்.
1969இல் டோக்கியோசென்றுகடல்சார் உயிரிவே தியியலில் பயிற்சிபெற்றார்.1973 இல் சிங்கப்பூர் நன் யாங்குபல்கலைக்கழகத்தில் கடல்சார் நுண்ணுயிரியல் பயிற்சிபெற்றார்.
1977ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் பாதிப்புற்றார். இலங்கைக் கடற் றொழில் திணைக்களத்தில் அறிவியலாய்வாளர் பணி யில் இருந்து தானாக விலகினார்.
யாழ்ப்பாணத்தில் காந்தளகம் பதிப்பகத்தைத் தொடங் கினார். கை மணிக்கூடு வணிகத்திலும் ஈடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இரண்டாண்டு கள் விலங்கியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
பின்னர் ஐக்கிய நாடுகள் ஆலோசகராக ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் நாடுகளில் பணியாற்றினார். தமிழ் மொழி, விலங்கியல், கடற்றொழில் ஆகியது றைகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவ ரது ஆய்வுக் கட்டுரைகள், தமிழ், ஆங்கிலம், யப்பான், பிரஞ்சு, அரபு,சுவாகிலிமொழிகளில் வெளி வந்தன.
1992ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத் தில் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார். தென்னகத்தில், சென்னையில் 1980ஆம் ஆண்டில் காந்தளகம் என்ற பெயரில் பதிப்பகத்தைத் தொடங் கினார்.கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகத்தில் பதிப் பாளராக வெற்றி நடைபோடுகிறார். ‘பதிப்புத் தொழில் உலகம்” என்றமாத இதழை ஐந்தாண்டுகள் தொடர்ச் சியாக நடத்திவந்தார்.
இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு மற்றும் நடுக் குழு உறுப்பினராக 1977-1979, 1986-1990, பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் பணி புரிந்தார். 2016 தொடக் கம் இலங்கை சிவசேனையின் தலைவராக உள்ளார்.
மின்னம்பலவெளியில் இவரது சாதனைகள் பல. தமிழ்நூல். காம் (tamilnosl.com)என்ற இணையதளத் தில் 35 ஆயிரத்திற்கும் மேலானநூல்களைப் பட்டியல் இட்டு,மின் வணிகத்தை நடத்தி வருகிறார்.
பன்னிருதிருமுறைகளைத் தேவாரம். ஆர்க் (thevaaram.org) இணையதளத்தில் பதிந்து, 120 நாடு களில் நாள்தோறும் 20,000 சொடுக்காளருக்கு உதவுகிறார்.
பன்னிருதிருமுறைகளை ஆங்கிலம், இந்தி, சிங்களம், மலாய், யேர்மன், அசாமியம், பர்மியம், தாய்லாந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், உள் ளிட்டமொழிகளில் மொழிபெயர்ப்பித்து இணையத ளத்தில் வெளியிட்டுள்ளார்.
திருப்பதி தேவத்தானத்தின் மொழிபெயர்ப்பு ஒருங் கிணப்பாளராக உள்ளார். தமிழக ஆளுநரின் மொழி பெயர்ப்பு ஒருங்கிணப்பாளராகஉள்ளார்.
கடந்த 1957 – 1959 காலப்பகுதியில் தமிழரசுக் கட் சியின் வார இதழ் சுதந்திரனின் மாணவர் பக்கங்களில் எழுதத் தொடங்கியவர். அக்காலப் பகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் அப் பக்கங்களில் எழுதிக் கொண்டி ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் அறப்போர் தொடங்கிய 1961 மார்ச்சு மாதத்தில்,சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின் றவாறே தமிழகத் தலைவர்களிடம் ஆதரவு கேட்டார். கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட இலங்கை மாண வர்கள் பலருடன் சேர்ந்தார். இலங்கைத் தமிழர் அறப் போருக்கு ஆதரவாகச் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்தத் திராவிடமுன்னேற் றக் கழகத்தைத் தூண்டியவர். அத்துடன் அதனை முன் னெடுக்க உதவியவர்.
வினோபாவே எழுதிய பகவத் கீதையின் தமிழாக்கம், உலூயிபிசரின் காந்தியின் வாழ்க்கை போன்றநூல்க ளைப் படித்ததன் மூலம் பலரின் அநுபவங்களைப் பெற்றதோடு இன்றுவரைஅவற்றைப் பேணுகின்றவர் என்ற அடிப்படையில் முதன்மை பெறுகிறார்.
அவர் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த காலகட்டம். 1966 அக்டோபர்.
அப்போதைய அரசில் தமிழரசுக் கட்சியின் சார்பாக இலங்கையில் உள்@ராட்சிஅமைச்சராக இருந்தவர் இராணியின் வழக்குரைஞர் மு. திருச்செல்வம் (நீலன் திருச்செல்வத்தின் தந்தையார்). 1976 நவம்பர் 19ஆம் நாளில் அவர் இறக்கும் வரை 13 ஆண்டுகள் நம்பிக் கைக்குரிய உதவியாளராக இருந்தவர். அந்தநாள்களில் தமிழரசுக் கட்சித் தொண்டரானார். தமிழ்த் தேசிய உணர்வு அவர் வாழ்வானது.
1963இல் கொழும்பில் பம்பலப்பிட்டி மெல்பன் நிழற்சாலையில் மூத்த உறவினர் பேராசிரியர் முனை வர் ஆ. கந்தையாஅவர்களுடன் தங்கியிருந்தார்.
அக்காலத்தில் அவருக்கு அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை ஆகியவற்றில் பணி செய்கின்ற வாய்ப்புக் கிட்டியது. சேர் கந்தையா வைத்தியநாதன் அவ்வமைப்புகளின் தலைவராக இருந்து இவரை ஊக்குவித்தார்.அவருக்கு அலுவலக, நூலகப் பணிகளில் உதவியதோடு திருக் கேதீச்சரத்திலும் பணிகளை மேற்கொண்டவர்.
கொழும்பு இந்துவாலிபர் சங்கத்தின் ‘இந்து இளைஞன்” என்ற இதழில் எழுதியவர். இலங்கையின் இந்து இளைஞர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஒரே குடையுள் கொண்டு வருகின்ற கருத்தியலோடு இவர் பெரும்பணி மிகவும் முக்கியமானது. 1971 தொடக் கம் 1977 வரை இலங்கையின் 75 இந்து இளைஞர் மன்றங்களை இணைத்து இந்து இளைஞர் பேரவையை நிறுவினார்.அதன் தலைமைச் செயலாளராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.யாழ்ப்பா ணத்தில் நடைபெற்றநான்காவதுஅனைத்துஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்புக் குழுவில் காத்திரமாகப் பங்க ளித்தவருள் இவரும் ஒருவர்.
இவரிடம் உள்ள விசேட திறமை யென மக்கள் தொடர்பாடல் பணியைக் குறிப்பிடலாம். சந்தித்த மாத் திரத்திலே எவரையும் கரவக் கூடியவர். அறிவியல் எல்லை களைத் தாண்டிப் பேசுவது இவர் இயல்பல்ல எனவும் அஃது அவர் பண்பல்ல எனவும் குறிப்பிடலாம்.
தமிழ், சைவம், அரசியல் சார்ந்தபரப்பிலே ஏறத் தாழ 70 ஆண்டுகள் இவர் தளராது பணியாற்றி வருவதே அதற்குச் சான்று.
யாழ்.மாநாகர சபை வேட் பாளர், பொதுவுடை மைக் கட்சியார், இவரது ஆசிரியர், மு. கார்த்திகேய னுக்கா கத் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்ட போது இவ ருக்குவயது 16. இலங் கைத் தமிழரசுக் கட்சியின் அறப் போருக்காகத் தமிழகத்தில் அனைத்துக் கட்சியின ரிட மும் பேசிய மாணவன். பின் யாழ் கச்சேரிக்கு முன் போராட் டத்தில் பங்கேற்றார். அப்போது இவருக்கு வயது 19.
வண்ணார் பண்ணை அருள் மிகு விசுவேசப் பிள் ளையார் திருக்குள மீளமைப்புத் திருப்பணியைத் தனது 19 ஆவது வயதிலும், திருத்தேர் மீளமைப்புத் திருப் பணியைத் தனது 24 ஆவது வயதி லும் மேற்கொள்ள அவன் அருளாசியைப் பெற்றவர்.
சிங்களம் மட்டும் சட்டத்தை முறியடிக்க அரசாங்க எழுவினைஞர் சங்கவழக்குக்காகச் சென்னையில் வழக் குரைஞர்கள் உதவிபெற உழைக்கையில் இவருக்கு வயது 21. தமிழக இலங்கைமாணவர் சங்கத் தலைவ ராக இருந்தபோதுசென்னைத் தூதரகத்தில், பெப்ரு வரி 4 சுதந்திரதினவிழாக் கொண்டாட்டத்தில் கொடி யேற்றமறுத்தபொழுது இவருக்குவயது 23.
யாழ்ப்பாணக் கல்லூரிப் பட்டதாரி வகுப்பு விரிவு ரையாளராகப் பொறுப்பேற்றபோது வயது 25. உள் @ராட்சிஅமைச்சர் மு. திருச்செல்வத்தின் தனிச் செய லாளரானபோது வயது 25. இலங்கைக் கடற்தொழில் அமைச்சின் அறிவியல் ஆய்வாளராகையில் வயது 26.
ஐநா உலக உணவு வேளாண் ஆலோசகராகையில் வயது 29. இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலை மைச் செயலாளராகையில் வயது 30. கடற்றொழில் ஆய்வு அலுவலர் தொழிற்சங்கத்தின் செயலாளரான போதுவயது 31. யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலக்ததமிழாராய்ச்சி மாநாட்டைநடத்திய காலத்தே இவருக்குவயது 32.
பதிப்பாளராக,கைமணிக்கூடு வணிகரானபோது வயது 36. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகவிரிவுரையா ளரானபோது வயது 37. மீண்டும் ஐநா ஆலோசகராகப் பணியேற்றபோது வயது 38. சென்னையில் பதிப்பாளரா கத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோது வயது 45. ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலம் தொடர்பாக, தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களுடன் சம அளவு நல்லுறவைப் பேணிய வரேமறவன்புலவு க.
சச்சிதானந்தன். எவரையும் எந்தநேரமும் சந்திப்பார். களைஞர் மு. கருணாநிதி இவரின் உழுவலன்பர்.அவர் தனது 67ஆவது வயதில் மறவன்புலவுசச்சிதானந்தன் கேட்டதற்கிணங்க,ஒரேநாளில் ஈழ ஏதிலியருக்காக 100 கோடிரூபாய் தமிழகஅரசு வழி நிதியை ஒதுக்கினார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக, இந்தியப் பிரதமர்கள் பலருக்குத் தொடர்பாளராகப் பணியைத் தொடங்கியது போதுவயது 43. அவர் தனது 49ஆவது வயதில் தில்லியில் உள்ள இராஜீவ் காந்தி இல்லம் சென்றமைதொடர்பாகக் கைதுசெய்யப்பட்டார்.
சென்னையில் பயங்கரவாதத் தடைநீதிமன்றத்தில் இன்னமும் வழக்கு நடைபெறுகிறது. அதனால் இவர் தன் கடவுச் சீட்டுகளுக்காக இன்றும் அலைகிறார். இவரது 55ஆவது வயதில் விடுதலைப் புலிகளுக்கு மருந்து கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் சென்னைச் சிறையில் ஒருமாதம் தடுத்து வைக்கப்பட்டார். அவர் தனது 59ஆவது வயதில் இந்திய அரசின் நாடு கடத் தல் ஆணையை நீதிமன்றம் வழி தடுத்தார்.அக்காலத் தேபிரதமர் வாஜ்பாயிக்காகவிடுதலைப் புலிகளிடம் பேசினார்.தனது 65ஆவது வயதில் பிரதமர் மன்மோ கன்சிங்கை இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பி னர் சந்திக்கஏற்பாடுசெய்தார்.
இவ்வாறான அவர் பற்றிய தகவல்கள் இணைய வெளியில் விரவிக் கிடக்கின்றன. வாழும்போது வாழ்த் துவோம் என்பதே அறநெறி. வாழ்த்துவதற்குத் தகமை உடையவர் .பாராட்டப்பட வேண்டியவர்.புகழ்வதற் குரிய அத்தனை தகமைகளும் அவரிடம் இருக்கின் றன. .He deserves to be celebrated என்ற ஆங்கிலத் தொடர் இவருக்குமிகவும் பொருத்தமானது.
கணபதி சர்வானந்தா
