உதைப்பந்தாட்ட துறையில் வடக்கிற்கு பெருமை சேர்த்த அன்டனிப்பிள்ளை
உதைப்பந்தாட்ட துறையில் பல்வேறுசாதனைகள் படைத்துவரும் வடமாகா
ணத்திற்கு, குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தவர், சூசைப்பிள்ளை அன்டனிப்பிள்ளை (கிளிபேட்) இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணி யில் விளையாடிய வீரராவார். பாடசாலைகாலம் தொட்டு இன்றுவரை உதைப்பந்தாட்டத்துடன் நெருக்கத்தைக் கொண்டவர். இலங்கை உதைப்பந் தாட்ட சம்மேளத்தின் உப தலைவராகவும் இருந்தவர். இவரை கௌரவிக்கும் முகமாக விளையாட்டுத் துறை அமைச்சு யாழ்ப்பாணத்தில் நடத்திய தேசிய விளை யாட்டு விழாவில் ஒலிம்பிக்தீபத்தை ஏற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1957ல் யாழ்ப்பாணம் பாசையூரில் பிறந்த இவர், யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். 1966ல் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் இரண்டாம் பிரிவுகால்பந்தாட்டஅணியிலும், 1967 – 1971 05 வருடங்கள் முதலாம் பிரிவு அணியிலும் இடம் பெற்றார். கல்லூரி அணியில் ஆரம்பத்தில் இடது மத்திய களவீரராக விளையாட ஆரம்பித்து, மத்தியகள வீரராகவும் இடதுகரை முன்னனி வீரரா கவும் பின்னர், இடது உள் முன்னனி வீரராகவும் விளையாடியுள்ளார். 1969, 1970ம் ஆண்டுகளில் கல்லூரி அணிக்குதலைவராககடமையாற்றியுளளார்.
1968ல் யாழ் மாவட்ட இளைஞர் கால்பந்தாட்ட அணியின் தலைவராக கடமையாற்றியபோது, போட்டியிலும் கலந்துகொண்டார். அப்போதைய இலங்கை பாடசாலைகள் அணியின் பயிற்றுவிப்பா ளர். அல்பேட் பெர்னான்டோ இவரை, இலங்கை பாடசாலைகள் அணியின் குழாமில் இணைத்துக் கொண்டார்.
1969ல் இந்திய இலங்கை விளையாட்டுப் போட்டி கள் சென்னையில் நடைபெற்றபோது, இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றார். இந்தஅணியானது, இந்திய அணியை வெற்றிகொண்டு சம்பியனானது. தொடர்ந்து இலங்கை அணி பயிற்சிகளிற்காக ஏறக்குறைய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு செல்ல வேண்டி ஏற்பட்டது. இலங்கை தேசிய அணிகளில் தொடர்ந் தும் விளையாடுவதில் கவனம் செலுத்தினால் இவரது கல்விக்கும் பாடசாலையின் பாடசாலையின் சட்ட திட்டங்களிற்கும், கட்டுப்பாடுகளிற்கும் இடையூறு ஏற்படுமென நினைத்து இவரது பாடசாலை அதிபர் 1969ம் ஆண்டு மட்டுமே இவர் இலஙகை தேசிய அணியின் பயிற்சிகளிற்குசெலலஅனுமதிஅளித்தார். அப்போதுபாசையூர் சென். அன்டனீஸ் விளையாட்டு கழகத்திற்காகவும் யாழ் தெரிவு அணிக்காகவும் விளை யாட இவருக்கு விஷேட அனுமதி வழங்கினார்கள்.
சென ஜோன்ஸ் கல்லூரியில் இருந்து இலங்கை தேசிய அணியில் இடம்பெறும் வீரர் ஒருவருக்கு அதியுயர் விருது வழங்கி கௌரவிப்பது என 1971ல் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க மீண்டும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட சிரேஷ்ட அணியில் இடம் பெற்று இந்தியா சென்றார். இதன் மூலம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் அதியுயர் விருதை வென்ற முதலாவது வீரன் என்ற பெருமையும் பெற்றார். பாடசாலையில் படிக்கும்போதே யாழ்மாவட்டத்தில் இருந்து, இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம் பெற்ற ஒரே ஒருவர் இவரேஆவார்.
1967ல் பாசையூர் சென் அன்டனிஸ் விளையாட்டு கழகத்தின அணியில் இடதுகரை முன்னனி வீரராக விளையாட ஆரம்பித்து, அந்த அணிசம்பியன் பட் டத்தை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
சென் அன்டனிஸ் கழக அணியில் பல வருடங்கள் இடதுகரை முன்னனி வீரராகவும், பின்னர் மத்தியகள வீரராகவும், தொடர்ந்து நடுபின்கள வீரராகவும் அறு தியில் கோல் காப்பாளராகவும் விளையாடியுள்ளார். இவர் ஒருகோள் காப்பாளரும் கூட. 1969ல் இலங்கை பாடசாலை அணியில் இடம் பிடித்த காரணத்தினால் பாசையூர் சென் அன்றனீஸ் கழகத்திற்கும் இவருக்கும் பயிற்சியாளராக இருந்த ஆ.மு. மரியநாயகம் அப்போ தில் இருந்து இவரை தமது உதவிப் பயிற்ச்சியாளராக பயன்படுத்தினார். இந்த அறுபலத்தினை கொண்டி ருந்தமையினால் 1974ம் ஆண்டு தொடங்கி பலவரு டங்கள் சென் அன்றனீஸ் தமிழகத்தின் பயிற்ச்சியாள ராககடமையாற்றி அக் கழகம் யாழ்மாவட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பல Champion களை வெல்வ தற்கு முக்கிய பங்காற்றினார். இவரிடம் பயிற்ச்சி பெற்ற பல வீரர்கள் அணியில் பங்கு பற்றினார்கள்.
1975ல் சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்ட அந்தோனிப்பிள்ளை பல வரு டங்கள் கல்லூரியின் உதைப்பந்தாட்ட அணியின் பயிற்ச்சியாளராக கடமையாற்றினார். நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டதுடன் வெளிநாடு சென்று அங்கும் பல போட்டிகளில் வென்றார்.
1977ல் யாழ் உதவி அரச அதிபர் பிரிவு இளைஞர் அணிக்கிடையிலான போட்டியில் யாழ் உதவி அரச அதிபர் அணிவெற்றி பெற்றது.
1994 தொடக்கம் 2022 யாழ் பல்கலைக்கழக அணிக்கு பயிற்ச்சியாளராக இருந்துள்ளார்.
1995 வட பிராந்தியத்திற்கான உதைப்பந்தாட்ட பயிற்சியாளராக இலங்கை உதைப்பந்தாட்ட சமேள னத்தால் நியமிக்கப்பட்டார்.
2001ல் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத் தால் ஒழுங்கமைப்பாளராகநியமிக்கப்பட்டார்.
2002ல் சமாதானஉடன்படிக்கையின் போது இலங்கை மாலதீவு அணிக்கு இடையிலான போட்டியை யாழ் துரையப்பாஅரங்கத்தில் நடத்து வதற்கு முன் நின்றார். யாழ் உதைப்பந்தாட்ட மத்தியஸ்த்தர் சங்கத்தில் நீண்டகாலம் செயளாளர் ஆகவும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
2002ல் லண்டன் சென்று பயிற்சிகளைபெற்ற இவர் 2009ல் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் சம் மந்தமான பயிற்சி2009ல் அதற்கு மேலதிகமான பயிற் சிகளை பெற்றுசான்றிதழ்களைபெற்றார்.
2015இல் வடக்கு மாகாண லீக்குள் ஒன்றினைந்து வடமாகாண உதைப்பந்தாட்ட அழிவிலிருந்து பேர வையை ஆரம்பித்தபோது அதன் தலைவராக இருந் தார்.
இன்றுவரை உதைப்பந்தாட்டம் மற்றும் அனைத்து விளையாட்டுக்களிலும் வடமாகாணம் முன் நிற்கவேண்டுமென்றுஅர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் இவருக்கு டான் ரீவிவாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதில் பேருவகை கொள்கின்றது.
