உலகிற்குப் பொருந்தும் உன்னத மனிதர்களைச் செதுக்கும் சிற்பிகளாக நல்லாசிரியர்கள் போற் றப்படுகின்றனர். ஒவ்வொரு மனிதனது வாழ்வியலி லும் ஒரு முன்மாதிரி மனிதனாவது காணப்படுகையில் பெரும்பாலும் அவர் ஆசிரியர் ஒருவராக விளங்குவதே வழமை. இவ்வகையில் எம்மண்ணில் கற்று உயர்ந்து விளங்கும் பலருக்கான உதாரண புருஷர் திரு. வி.எஸ். குணசீலன் ஆசிரியர் என்றால் மிகைப்படாது.
1959.10.26 கரவெட்டியில் வல்லிபுரம் சின்னத் தம்பி – சிவகாமி தம்பதியரின் மகனாகப் பிறந்த இவர் நெல்லியடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம் பயிலும் காலத் தில் தனது 17 ஆவதுவயதில் சகோதரனை இழந்து சில மாதங்களுள் அரச உத்தியோகத்தராக விளங்கிய தந்தையை 1977இல் இடம்பெற்ற இனவன் முறைக் குப் பறிகொடுத்தார். இருப்பினும் கல்வியைப் பெறு வதில் தளர்வுறாது – அன்னையின் வழிகாட்டலில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானப் பட்டதாரியானார்.
அரச சேவையில் உயிரியல் விஞ்ஞானப் பட்ட தாரி ஆசிரியரா கவல்வை சிதம்பரக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாட சாலை என்பவற்றில் பணியாற்றியதோடு 20 ஆண்டுக ளுக்கும் மேலாக பலாலி மற்றும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைகளில் விஞ்ஞானத்துறை சார்ந்த ஆசிரியர் களுக்கு உயிரியல் போதித்து 2019 இல் அரசபணியில் இருந்து இளைப்பாறுகை பெற்றார்.
திரு. வி.எஸ்.குணசீலன் பிரபலமாக அறியப்படுவது அவரது தனியார் துறைசார்ந்த உயர்தர மாணவர்க ளுக்கான உயிரியல் கல்விப் போதனையாலாகும். 1986 தொடக்கம் இன்றுவரை வடமராட்சி மற்றும் யாழ் நகரைமையப்படுத்திய கல்வி நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குப் போதித் துள்ளார். தாவரவியல் மற்றும் உயிரியல் போதித்து வருகின்றார் என்பதைக் காட்டிலும் வாழ்க்கையின் மகிமையை உணரச் செய்கின்றார் என்றே அவரது மாணவர்கள் பலரும் குறிப்பிட்டுப் பெருமை கொள் கின்றனர் இன்று மருத்துவத்துறை உள்ளடங்கலாக பல்வேறு உயர்பதவிகளை அலங்கரிப்போரில் கணிச மானோர் ஆசிரியர்களிடம் கற்றமையைப் பெருமை யாகக் குறிப்பிடுகின்றனர்.
போர்க்காலக் கல்வி என்பது இன்றைய தலைமுறை அறியாத ஒன்று. நாளாந்தம் எதிர்கொள்ளப்பட்ட ஷெல் வீச்சுகள் விமானத் தாக்குதல்கள் குண்டுவெடிப்புகள் வாழ்வாதார நெருக்கீடுகள் என்பவற்றின் மத்தியில் கூட ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிட்டபோது வட புலக் கல்விநிலை வீழ்ச்சிகண்டிருக்கவில்லை என்பது நாம் அறிந்ததே. இதற்குப் பின்புலமாக அன்றைய ஆசிரியர்களே பிரதான காரணராக விளங்கினர். இவ் வாறான ஆசிரியர்கள் சிலருள் அன்றுபோல் இன்றைய மாணவர்களும் வாஞ்சையுடன் கற்கும் வண்ணம் கல்வி வழங்கும் ஆசான் என்றால் எல்லோ ரது பார்வையும் குணாசேரை நோக்கியேகுவியும்.
அதனது நன்றி வெளிப்பாட்டை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக 2017 இல் கனடாவிற்கு அழைக்கப்பட்டு சமுதாயசிற்பி என்ற விருது வழங்கி கௌரவித்தனர். இதே போன்று 2018 இல் இலண்டனில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பெருமெடுப்பிலான விழா ஒன்றை முன் னெடுத்தனர். 2019இல் அவுஸ்திரேலியாவில் சிட்னி மெல்பேர்ண் பிறிஸ்பேர்ண் கன்பரா எனப் பல்வேறு இடங்களிலும் கௌரவிப்புகளை மேற்கொண்டனர். இவரது முன்மாதிரியான ஆசிரியத்துவத்திற்கான கௌரவமாக யாழ்ப்பாண மாநகரசபையின் சைவ சமய விவகாரக் குழு வழங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்விருது ஆசிரியர் திரு. வி. எஸ்.குணசீலன் அவர்க ளுக்கு வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை மன்றத் தின் கௌரவபோஷகராக விளங்கும் இவர் யாழ்ப்பா ணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பழைய மாண வர் சங்கத்தின் தற்போதைய தலைவராக விளங்கி பல் கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பொன்விழாவை முதல் நிகழ்வாக முன்னெடுத்த முன்னோடியாகவும் விளங்குகின்றார்.
வடமராட்சி மருத்துவர்கள் இணைந்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கான ஓய்வு விடுதியை அமைத்தபோது தமக்கு உயிரியலைக் கற்பித்ததம்பிராஜா, குணசீலன் ஆகிய இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளின் பெயர்களைக் கல்லில் பொறித்து அவர்கள் இருவரைக் கொண்டு விடுதி யைத் திறந்து வைத்தமைகூட ஆசிரியத்துவம் வாழ்கி றது என்பதற்கானசான்று ஆகும்.
25 ஆண்டுகள் காலவரலாற்றைக் கொண்டடான் தொலைக்காட்சி ஆசிரியத்துவத்திற்கும் முக்கியத்து வம் வழங்குகின்றது. இதற்கென கல்வி தொலைக்காட்சி என்ற அலைவரிசையைத் தொடக்கி இன்றுவரை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டீருக்கின்றது. இச் சூழலில் பலரது வாழ்விலும் ஒளியேற்றிய நல்லா சான் ஒருவருக்கு ஆசிரியத்துறைக் கானடான் தொலைக்காட்சி வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதைதிரு. வி. எஸ்.குணசீலன் அவர்களுக்கு வழங்கு வது சாலச்சிறந்ததாகும்.
உலகோர் வாழ்த்துகளுடன் நீண்டஆயுளுடனும் நிறைந்தவளங்களுடனும் வாழ்வாங்குவாழப் பிரார்த் தித்துஎங்கள் அன்புஆசானுக்கு இனிய நல்வாழ்த்துக ளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சந்திரமௌலீசன் லலீசன்
(ஆசானின் மிகப்பழையமாணவன்)
