இது மண்ணுக்குள்ளிருந்து மாவீரம் வெடித்து எழுச்சி கொள்ளும் பொழுது! தடுத்திட முடியுமோ?
இந்தப் மடை போதுமா?
“தாயக மக்கள் போராட்ட குணத்தைத் தொலைத்து விட்டார்கள்!
எம் தமிழ் மக்கள் விலை போய் அநுர அரசின் பின்னால் போய்விட்டார்கள்..” என்று பலவாறாக எம் தாயக மக்களைப் பலரும் தூற்றியபோது..
“இல்லை! எம் மக்கள் ஒருபோதும் சோரம் போக மாட்டார்கள்!” என
உறுதியாக வாதிட்ட என் போன்றோரின் நம்பிக்கை வீண் போகவில்லை!
பட்டது போல் தெரியும் அறுகம் புல்..
எங்கோ ஒரு வான் துளி பட்டவுடன்..
பச்சையம் ஏற்றித் திமிறி நிமிர்ந்து எழுந்து பற்றிப் படருமாம் அறுகம் புல்!
அதனைப் போன்றவர்கள் எம் தமிழ் மக்கள்!
வரலாற்றில் மீண்டும் ஒரு முறை இந்தக் கரி நாளில் தாயகத்தில் எம் தமிழ் மக்கள் ..
“எழுகைகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள்!” என்பதற்கணங்க
மாபெரும் எழுச்சி வரலாறு படைத்துள்ளனர்!!
தன்னெழுச்சிகொண்டு அலை அலையாகப் போராடும் மக்களை அதிகார வெறி கொண்ட அடக்குமுறைக் கரங்களால் என்றுமே அடக்கி ஒடுக்க முடியாது!
“எங்கள் மண்ணில் இன்றும் மாவீர்ர் போராடி வாழ்ந்து விதையுண்ட தடம் எரிபற்று நிலையில்தான் தகித்துக்கொண்டே இருக்கின்றது!” என்பதற்கு..
இன்றைய கரி நாளில் தாயகத் தமிழரின் மக்கள் எழுச்சி தக்க சாட்சி!
