சிறுபிட்டியில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து வரும் ஈழத்து இசைத்தென்றல் சிறுபிட்டியூர் தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் .இவர் சில இணையதளங்களை நடத்திவருவதோடு 10 வருடங்களாக எஸ்.ரி .எஸ் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிணையும் சிறப்பாக இயக்கி வருகிறார்.
பாடல்களை சொந்தமாக எழுதி இசையமைத்தும் ,கவிதைகள் பல எழுதியும் ,ஒரு ஊடகவியாளராகவும்,சிறந்த பண்பாளராகவும் இருக்கும் இவருக்கு இன்று பிறந்தநாள். இவரை வாழ்த்தும் இவ்வேளை லண்டனில் வசிக்கும் இவரது நண்பர் எழுதி அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்தை இங்கே இணைப்பதில் நாம் மகிழ் ச்சியடைகிறோம்.

இசைக்கும் கவிதைக்கும் இலக்கணமாகத் திகழும்
என் இனிய நண்பனுக்கு,
உன்னுடைய இந்தச் சிறப்புமிக்க நாளில்,
உன்னை மனதார வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய நீண்ட கால நட்பும், நீ என் மீது காட்டும் மாறாத பாசமும்
நான் பெற்ற பெரும் சொத்துக்கள்.
உன் விரல்கள் மீட்டும் இசையிலும்,
நீ கோர்க்கும் மெட்டுகளிலும் ஆன்மா உறைகிறது.
உன் இசை பலரது இதயங்களை வருடி, அமைதி தரட்டும்.
சொற்களைக் கொண்டு நீ செதுக்கும் கவிதைகள்,
வாழ்வின் எதார்த்தத்தையும் அழகையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
உன் பேனா முனை இன்னும் பல காவியங்களைப் படைக்கட்டும்.
கலையை விட மேலானது உன்னுடைய குணம்.
அனைவரிடமும் நீ காட்டும் பணிவும், அன்பும்
உன்னை ஒரு சிறந்த மனிதனாக உயர்த்திக் காட்டுகிறது.
“இசையாய் இனித்து, கவிதையாய் மிளிர்ந்து, பண்பால் உயர்ந்து… நீடுழி காலம் நோய் நொடியின்றி, எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ உன்னை மனதார வாழ்த்துகிறேன்”.
உனது நீண்டநாள் நண்பன்
