இலங்கையில் தமிழர் நாம், தமிழ்க் கலைகள் என்ற ரீதியிலும் உணர்விலும், கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் நமது இசை, நடனமாக கொண்டிருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் ஏற்றிவைத்திருக்கிறோம்.
ஆனால், தமிழர் தாமென்றாலும், நம்முடைய மற்றெல்லா வாழ்வம்சங்களிலும் நமக்கான தனித்த அடையாளம், வேறுபாடு உண்டு. அது எளிதில் வேறுபடுத்தி அறியக்கூடியது. பேச்சு வழக்கில், எழுத்தில், உடையில், உணவில், பண்பாட்டு, மத சடங்குகளில் என்று, பொதுவாக அனைத்திலுமே இந்த அடையாளம் தென்படுகிறது. இது, இலங்கை யின் தமிழ்த் தேசிய இனத்தின் தனித்த அடையாளம். ஆனால், ஒரு தேசிய இன அடையாளமாக அந்த இனத்தை எங்கும் பிரதிநிதித்துவப்படுத்தி அடை யாளப்படுத்தவல்ல அதி முக்கியமானதான இசையில், நடனத்தில், நம்முடையதான அந்த அடையாளம் இல்லை. இந்த உணர்வின் தெளிவில், முதன்முதலில் உந்துதல்கொண்டவர் கலைஞர் வேல் ஆனந்தன்.
தேவதாசிகளின் சதிர் நடனம் இலங்கையிலும் ஆடப்பெற்றது. 1930களில் ‘பரதநாட்டியம்’ என்ற நாமகரணமும், பிராமண பெண்ணான ருக்மிணி அருண்டேலின் பரதநாட்டிய அரங்கேற்றமும் ஏற்ப டுத்திய மறுமலர்ச்சியில், பரதநாட்டியம் இந்தியாவில் சமூக அந்தஸ்தின் சின்னமாக மாற ஆரம்பித்தபோது, இலங்கையிலும் அது அவ்விதமாகவே சிறிதளவில் பரவவும், பேணப்படவும் தொடங்கியது. கூடவே, கேரள மாநிலத்தின் கதகளியும் ஆந்திர மாநில கூச் சுப்புடியும் அறிமுகமாயின.
உண்மையில், இலங்கைத் தமிழர்களிடத்தான தற்போதைய நடன பரம்பலின் பிதாமகராக கதகளி நடன பேராசான் குரு கோபிநாத்தையே கருதலாம். 1940களின் தொடக்கத்தில் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருகர் சு. நடேசபிள்ளையின் அழைப் பில் இராமநாதன் கல்லூரி, பரமேஸ்வரா கல்லூரி (தற்போதைய யாழ். பல்கலைக்கழகம்) ஆகியவற்றின் நிதியுதவிக்காக நிகழ்ச்சியளிக்க தனது குழுவினருடன் வந்த குரு கோபிநாத், இராமநாதன் கல்லூரியிலும் பின்னர், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெரு வில் வி. ஆர். இராசநாயகம் என்பவர் நிறுவி நடாத் திய யாழ். நடன பாடசாலையிலும் கதகளி வகுப்புக் களை ஆரம்பித்தார். இந்த அறிமுகத்தில்தான் கொக்கு வில் ‘கலாபவனம்’ ஏரம்பு சுப்பையா மாஸ்டரும், கீதாஞ்சலி’ வி. கே. நல்லையா போன்றவர்களும் பின்னர் சென்னை சென்று கோபிநாத்திடம் மேலும் பயிற்சிபெற்று, யாழ்ப்பாணத்தின் நடனக்கலைப் பரம்பலுக்கு வித்திட்டார்கள். குரு. கோபிநாத்தின் ஆலோசனையில், யாழ். நடன பாடசாலையுடன் தொடர்பாயிருந்த டபிள்யூ. எம். குமாரசாமியின் புதல்வி திரிபுரசுந்தரி இலங்கையின் முதல் மாணவி யாக, வழுவூர் இராமையா பிள்ளையிடம் பரதநாட் டியம் பயின்றார்.
நெடுந்தீவைச் சேர்ந்த கதகளி ஆடல் கலைஞரான வேல் ஆனந்தன், குரு கோபிநாத்தின் சிஷ்யர். நெடுந் தீவு மகா வித்தியாலயத்தில் சுப்பையா மாஸ்டரிடம் நடன கற்கையை ஆரம்பித்தவர், புது டில்லியிலும், திருவனந்தபுரத்திலும், சென்னையிலும் பல ஆண்டு கள் குரு. கோபிநாத்திடம் அவரது விஸ்வ கலாகேந் திரா நிறுவனத்தில் பயின்று, அவருடன் அவரது நடன குழுவில் ஆடி, அதன் பிரதிமையாக ‘வேல் ஆனந்தன் நடன குழு’வை இலங்கையில் ஒரு கனவாக் கியவர். திருநெல்வேலி ‘கலைக் கோவில்’ அவரது நாட்டிய நிறுவனம். வேல் ஆனந்தன் புது டில்லியில் கதகளியுடன் கூடவே பரதநாட்டியத்தையும் கற்க வைத்தார் குரு. கோபிநாத். பந்தணைநல்லூர் பாணி யின் சுப்பராயபிள்ளையிடம் கற்றார்.
வேல் ஆனந்தனின் வருகை யாழ்ப்பாணத்து ஆடல் அரங்குக்கு – யாழ்ப்பாணத்து கலை உலகுக்கு ஒரு புதிதாக – ஒரு புது மலர்ச்சியாக அமைந்தது. அவரு டைய ஆடல், பல அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங் கியது. மக்கள் ரசனை பெருகியது. வசதிபடைத்த வட் டத்துக்கு வெளியிலும் ஆடல் கலை துளிர்த்துத் தழைக்கத் தொடங்கியது.
இசைக் கலைஞர்களுடன் ஒப்பிடுகையில் நடன கலைஞர்கள் மிகச் சிலரே. இசையிலும் நடனத்திலும் அப்போதிருந்த இந்த ஆதிக்கத்தைத் தகர்த்தவர்கள‘சங்கீதபூஷணம்’ பொன். சுந்தரலிங்கமும் கலைஞர்
வேல். ஆனந்தனும் ஆவர். வேல். ஆனந்தன் ‘கலைக் கோவிலை’ ஸ்தாபித்தபோது, இந்தியாவிலிருந்து திரும்பிய பொன். சுந்தரலிங்கம், யாழ்ப்பாணத்தில்‘இளம் கலைஞர் மன்றம்’ என்ற நிறுவனத்தைத் தொடங் கினார். அப்போது இவர்கள் இருவருமே பல எதிர்ப்பு களையும் சவால்களை எதிர்கொண்டனர். பணமும் அந்தஸ்துமான ஒரு வட்டத்துள்ளிருந்து இக் கலை களை வெளிக்கொணர தீவிரம்கொண்ட இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்தின் தீவகங்களைச் சார்ந்தவர் கள் என்பதுங்கூட இவர்கள் எதிர்கொண்ட சவால்க ளுக்கு காரணமாகியது. பொன். சுந்தரலிங்கம் புங்குடு தீவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களின் முயற்சியி லான இந்த வேளையில்தான் யாழ்ப்பாணத்தில் இசை யும் நடனமும், ஆற்றலுடனான எல்லோருக்குமான கலைகளாகும் வாய்ப்பைப்பெற தலைப்பட்டன.
வேல். ஆனந்தனின் நடனக் குழு, இலங்கை முழுவ தும் பிரபல்யத்தையும் வரவேற்பையும் பெற்றது. ஆனால், வேல். ஆனந்தன் ஆடலில் தன்னுடைய அங் கீகாரத்தையும் பிரபல்யத்தையும் மாத்திரம் எண்ண வில்லை; அதற்காக மாத்திரம் உழைக்கவில்லை. அவர் தன் இனத்தின் அடையாளத்தை, அதன் அங்கீகாரத்தை, அதன் பிரபல்யத்தையே எப்போதும் எண்ணினார்.
அவுஸ்திரேலியாவில் அனா பாவ்லோவாவிடம் மேலைத்தேய ‘பாலே’ நடனத்தைக் கற்ற ருக்மிணி அருண்டேல், சென்னையில் பந்தணைநல்லூர் மீனாட் சிசுந்தரம்பிள்ளையின் சிஷ்யைகள் ஜீவரத்தினம், ராஜ லக்ஷ்மி ஆகியோரின் நடனத்தைப் பார்த்த லயிப்பில அக் கலைக்காக ‘கலாகெ;ஷத்ரா’வைத் தொடங்கிய போது, பரதநாட்டியத்துடன் கதகளியையும் பயிற்றுவித் தார். கதகளி பாத்திரங்களில் தாமே ஆடும் பயிற்சியும் பெற்றிருந்தார். இந்த பின்புலத்தில் தன்னுடைய கலா கெ;ஷத்ரா பாணியை அவர் எண்ணினார்.
பரதநாட்டியம், பலவகைப் பாணிகளைக்கொண் டிருக்கிறது. மெலட்டூர் பாணி, மைசூர் பாணி, தஞ்சா வூர் பாணி, பந்தணைநல்லூர் பாணி, வழுவூர் பாணி என்றிவ்வாறு அது அமைகின்றபோது, ருக்மிணி அருண்டேல் பெரும்பாலும் பந்தணைநல்லூர் பாணியை அடியொற்றி, ‘கலாகெ;ஷத்ரா பாணி’ ஒன்றை வடிவ மைத்துக்கொண்டார்.
இவ்வாறேதான், பரதநாட்டியத்தில் ஈழத் தமிழர் அடையாளத்துடனான ஒரு பாணியின் தேவையை யும் அவசியத்தையும், அதற்கு ஏற்புடைத்தான பல்க லைக்கழக துணையுடன் நிறைவாக்கிவிட வேல். ஆனந்தன் அவாவினார். யாழ் பல்கலைக்கழகம் ஆரம் பிக்கப்பட்ட நிலையில், தலைவர் பேராசிரியர் க. கைலாசபதியும், கலாநிதி கா. இந்திரபாலாவும் இதில் மிகுந்த அநுகூலமான எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால், கைலாசபதியின் மறைவும், இந்திரபாலாவின் இடமாற்றமும் எதிர்பாராதவையாயின.
இன்று, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரத நாட்டியத்துக்கு ஒரு பீடம் இருக்கிறது. கல்வித் திணைக்களத்தில் நடனத்தை க. பொ. த. பரீட்சைக் குரிய ஒரு பாடமாக்கி, பாடசாலைகளில் அதனைக் கற்பிப்பதற்கு ஆசிரிய நியமனங்களை ஏற்படுத்தி, அந்த ஆசிரியர்களுக்கு ஆசிரிய கலாசாலைப் பயிற்சி அளிக்கவைத்துப் பெற்ற கற்கையில், இப் பல்கலைக்க ழக பிரவேசம் நிகழ்கிறது. இவ்வளவும் வேல் ஆனந்த னின் மிகப்பெரும் பகீரத பிரயத்தன முயற்சி. இதில் அவருடைய எதிர்நீச்சல், நம்மவர்களைத் தாண்டிய தாகவேயிருந்தது.
பரதநாட்டியத்துக்கான பல்கலைக்கழக பீடம் அப் போது இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தின் பரோடா எம். எஸ். (Maharaja Sayajirao) பல்கலைக் கழகத்தில் மாத்திரம்தான் இருந்தது. 1950இல் இது ஆரம்பிக்கப்பட்டது. கலாகெ;ஷத்ரா மாணவரான கீர்த்திமிக்க நடன வரலாற்றாசிரியர் மோகன் கோஹர் பீடாதிபதியாகவிருந்தார். அதன் பின்னர் அந்தப் பெருமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு கிடைத் தது. சென்னை கிருஷ்ணகான சபாவில் நடந்த ஒரு நாட்டிய மாநாட்டில் இந்தியாவின் அனைத்து நடன வகைகளும் சார்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள், நாட் டிய ஆசான்கள், கலா விற்பன்னர்கள், விமர்சகர் எல் லோரும் இருந்த அவையில் இதற்காக யாழ்ப்பாணம் பெற்ற பெருமையை ‘ஈழநாடு’ பத்திரிகைக்காக அம் மாநாட்டுக்குச் சென்றிருந்த நான் கண்டேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத் துடன் கதகளியும் இடம்பெற்றிருந்தது. கலைஞர் வேல். ஆனந்தன் அங்கு அக் கற்கை நெறிக்கான பொறுப்பா ளராகவும் பகுதிநேர விரிவுரையாளராகவுமிருந்தார். முதல் தொகுதி ‘டிப்ளோமா’ பெறுநர்கள் வெளியே றிய பின்னரும் தொடர்ந்த அக் கற்கை நெறி, நுண்க nலைத் துறைக்கு புதிய ஒரு பேராசிரியர் பொறுப் பேற்றதும் நிறுத்தப்பட்டது. பதவியேற்ற பேராசிரி யரை மற்றையவர்கள் எல்லோரும் சென்று சந்தித்தி ருந்தபோது, வேல். ஆனந்தன் அவரைச் சென்று சந்திக் கவில்லை என்பதால் இந் நிலை ஏற்பட்டதென்பது, இரகசியமாய் உறையும் இரகசியம்.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற வேல். ஆனந்தன் நடன குழுவின் நிகழ்ச்சி ஒன்றுக்கு பிர தம விருந்தினராக வந்திருந்த தொழிற் கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர் மேடையில் வந்து கலைஞர்களைப் பாராட்டிவிட்டு, வேல். ஆனந்தனிடம் ஒன்று கேட்டார்:
“இந்திய கலைஞர்களின் தரத்தில் நீங்கள் ஆடுகிறீர்கள். ஆனால், இலங்கையில் தனித்த இன அடையாளங்க ளுக்கு உரித்தான உங்களுக்கு, சிங்கள மக்களின் கண் டிய நடனம்போன்று தனித்த நடனம் ஒன்று இல்லையா?’’ – நான் அருகில் நின்றேன்.
சென்னை நாட்டிய மாநாட்டில் வேல். ஆனந்தனை மனதில் நினைந்துகொண்டதும், பேர்மிங்ஹாம் மேடையில் அப்போது அவரைப் பார்த்ததும், வேல். ஆனந்தனின் ‘கலை வாழ்வு’.
அவருடைய நாட்டிய மேடை மிக விசாலமானது. அவர் அளிக்கும் ‘நவரசங்களும் முத்திரா அபிநயங்க ளும்’, அவரும் பத்மினி செல்வேந்திர குமாரும் (நட ராஜா) இணைந்த ‘தாண்டவ நிருத்தியம்’, ‘விஸ்வாமித் திர மேனகா, ‘கீதோபதேசம்’, ‘பஸ்மாசுர மோகினி’என்பனவும், ‘கணையாழி’, ‘சீதா அபகரணம்’, ‘திருவி ளையாடல்’ என்பவற்வற்றோடு, இயேசு பிரானைக் கதாபாத்திரமாக கொண்ட ‘அருளும் இருளும்’ போன்ற பல நாட்டிய நாடகங்களும் நாட்டிய மேடையில் தடம் பதித்த அவரின் படைப்புகள்.
பின்னர், கீழைத்தேய ‘பாலே’ நடன வடிவிலான பிரமாண்ட தயாரிப்புகளாக சமூகத்தின் அவலங்களை யும், சமூக விழிப்புணர்வையும் சித்தரித்த ‘நீறுபூத்த நெருப்பு’, ‘ஆலயமணி’, ‘என்னதான் முடிவு’, ‘விடை கொடு தாயே’, ‘குருகெ;ஷத்திரம்’ போன்ற உன்னத படைப்புகளை வியப்புற அறிமுகமாக்கினார்.
பஸ்மாசுர மோகினியில் ரசிகர்களை ஆட்கொண் டவர், ரசிகர்களால் நிரம்பி வழிந்த வீரசிங்கம் மண்ட பத்தில் ‘பஸ்மாசுரன் -77’ நாட்டிய நாடகத்தை கரகோ ஷத்துடன் நிறைவாக்கி மேடையை விட்டு அகல்கை யில், ஒப்பனையுடனேயே பொலிஸ் ஜீப்பில் யாழ் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மறுநாள் அதிகாலை 3 மணிக்கு உடுவில் எம். பி., வி. தர்மலிங்கம் தடுப்புக் கூண்டிலிருந்து அவரைக் கூட்டிவந்தார்.
83க்கு முன்னதான, 77 கலவரம் ‘பஸ்மாசுரன் – 77’.
மாலி
