காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திறந்துவைத்தார்.
20 மெகாவாட் திறன் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொங்கல் இன்று திறந்துவைத்தார்.
2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டது.
‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் வலுசக்தி வரலாற்றில் முதல் முறையாக, தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட மிகப்பெரிய 04 காற்று விசையாழிகள் (Turbines) இங்கு நிறுவப்பட்டுள்ளன.
உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதோடு, இது உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறது.
நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து காற்றாலை மின்நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, விசையாழிகளை இயக்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
வலு சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரன், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஷெர்லி குமார, இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார ஆகியோருடன், CEYLEX Renewables நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சமீர கணேகொட மற்றும் அதன் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
![]()

More Stories
மணல் ஏற்றி வந்த டிப்பர் விபத்து..இருவர் உயிரிழப்பு!
யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்
டக்ளஸ் இணைப்பு செயலாளர் கைது!