வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சனிக்கிழமை(24) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த கூலர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
