January 17, 2026

ஈழத்தமிழன்

ஈழத்தமிழருக்கோர் தமிழ் இணையத்தளம்

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம்

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நவலக்ஷபான மற்றும் பொல்பிட்டிய மின் விநியோக மார்க்கங்களில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு காரணமாக நேற்று பிற்பகல் நுவரெலியா, மொனராகலை, பதுளை மற்றும் பழைய லக்ஷபான ஆகிய துணை மின்நிலையங்களின் மின் விநியோகம் முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.

இதன் காரணமாக, குறித்த துணை மின்நிலையங்கள் ஊடாக மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில் திடீர் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

அதேபோல், பிற்பகல் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின் விநியோக மார்க்கத்திலும் திடீர் கோளாறு ஒன்று ஏற்பட்டது.

இதன் காரணமாக எம்பிலிபிட்டிய, பெலியத்த, பலங்கொடை, தெனியாய, காலி, மாத்தறை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய துணை மின்நிலையங்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த துணை மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது மின்சாரம் தடைப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Loading

About The Author