தமிழர்கள் செறிந்து வாழும் பிரான்சின் பொபிஞி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 5.20 மணியளவில், ‘Sorbonne Paris Nord’ பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள Avenue de la Convention வீதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, குறித்த நபர் பலத்த வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மிக நீண்ட வாள் ஒன்றினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் உடலில் மிகவும் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொபிஞி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவர் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
