
விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்திய கூல் சகோதரர்கள் இப்போது தங்களது சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?
சிறுவர் பாலியற் குற்றவாளி எப்ஸ்ரெயின்(Epstein) கோப்புகள் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்த கூல் சகோதரர்களும் எப்ஸ்ரெயினின் ஆராய்ச்சிக்கு பங்களித்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதன் மூலம் முதியவர்களுக்கு உடலியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதன் மூலம் பெறப்படுவதாக நம்பப்படும் அமானுஸ்ய சக்திகள் குறித்த ஆராய்ச்சியின் பகுதிகளுக்கும் தான் இவர்களது அறிவு பயன்பட்டதா என்பதனை கூல் சகோதரர்கள் தான் ஊடகத்தின் முன்னே வந்து பேச வேண்டும்.
இதே கூல் குடும்பம் தான் மேற்குலகின் வழிகாட்டலில் போதிய அளவு நிதியைப் பெற்று இலங்கையில் University teachers human rights (UTHR) என்ற ஓர் நிறுவனத்தை உருவாக்கி இன அழிப்புக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்கள் குறித்தும் நபர்கள் குறித்தும் தகவல் சேகரித்து அந்த ஆவணத்தில் அடிப்படையில் விடுதலைப் புலிகளை மட்டுமல்ல அந்த நாளில் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய அத்தனை இளைஞர்கள் பற்றிய தகவலகளையும் சேகரித்து அதனை அவர்களுக்கு எதிரான அரசின், மேற்குலகின் சட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு பயன்படுமாறு உருவாக்கியவர்கள்.
உலகின் மிக மோசமான குரூரமான சிறுவர் பாலியல் குற்றமாகச் சொல்லப்படும் எப்ஸ்ரெயின் ஆராய்ச்சிக்கு உடந்தையாக இருந்த இந்த உத்தமர்கள் தான் , நேற்றுவரை UTHR என்ற அமைப்பை வைத்து எமது விடுதலைப் போராட்டதிற்கு எதிராக உலகெங்கும் எம்மையும் எமது போராட்டத்தையும், பயங்கரவாதமாக சித்தரித்தவர்கள், இதே கூட்டம் தான் முறிந்தபனை என்ற நூலையும் எழுதியது.
இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்லர். உலகில் நடைபெறும் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர்கள். இவர்களில் ஒருவர் தான் ரஜினி திரணகம, உலகில் எந்தவொரு தேசிய இனம் தன்னுடைய விடுதலைக்காக போராடினாலும் அதனை மோசமாகச் சித்தரித்து அழித்துவிட மேற்குலகின் சக்திகள் இவர்களுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்கிறது, சர்வதேச பல்கலைக் கழகங்களில் புலமைப்பரிசில் வழங்குகிறது, கற்பிக்க வாய்ப்பு வழங்குகிறது.
ஆனால் காலம் ஒரு கட்டத்தில் இவர்களை வெளிப்படுத்தும். வெளிப்படுத்தி இருக்கிறது. இது ஒரு சாதாரணமாக கடந்து போகும் சம்பவம் அல்ல…
