யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விடுதி முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.
