தாய்லாந்திலிருந்து இலங்கைக்குச் சூட்சுமமான முறையில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்கள் அடங்கிய பெருந்தொகையை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பரிசுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்பட்ட மேசைப் பலகைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பேலியகொடை பகுதியில் உள்ள சுங்கக் களஞ்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இந்தப் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
