உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் முக்கிய போக்குவரத்துப் பாலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் 280க்கும் மேற்பட்ட ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தபோதும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
