யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது பின்னால் வந்த KDH வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-11-2026) இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்யக் கோரி சாவகச்சேரி காவல் நிலையம் முன்பாக ஊரவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
