சுவிற்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலம், Leibstadt பகுதியில் 11.11.2026 அன்று காலை இடம்பெற்ற பணியிட விபத்தில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைச் சேர்ந்த 16 வயது உடைய ஆழ்வாப்பிள்ளை விக்னேஸ்வரலிங்கத்தின் (விக்கி)பேரனான ஜேடன் சுதாகரன் அவர்கள் அகாலமரணம் அடைந்துள்ளார்.
உயிரிழந்த செய்தி தமிழ், சுவிஸ் மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை ஆர்காவ் மாநிலப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Kuratle Jaecker நிறுவனத்தில் சரக்குகளைத் தூக்கும் ஃபோர்க்லிஃப்ட் வாகனத்துடன் பணிபுரிந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சுவிஸ் ஊடகமான Blick தெரிவித்துள்ளது. முதலாம் ஆண்டு தொழில்பயிற்சி மாணவனாகிய இவர் பாரம் தூக்கி வாகனம் ஒன்றை செலுத்தியபோதே இந்த துயரமான விபத்து நடந்துள்ளது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும், மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து ஆர்காவ் மாநிலப் பொலிஸாரும் அரச வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை நடத்தி வருகின்றன. விபத்தைத் தொடர்ந்து புதன்கிழமை நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரோஜர் குராட்லே, மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்தின் காரணம் தொடர்பாகப் பொலிஸாரும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகமும் விசாரணை நடத்துகின்றன. அதன் முடிவுகள் வெளிவரும் முன் யாரையும் குற்றஞ்சாட்டுவதைத் தவிர்ப்போம். அதேவேளை, தொழிற்பயிற்சியில் ஈடுபடும் இளையோரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.
வேலை கற்கச் சென்ற பிள்ளை, வீடு திரும்பாமல் போன துயரம் எந்தக் குடும்பத்திற்கும் நேரக்கூடாது.
ஜேடனை இழந்து வாடும் பெற்றோர், சகோதரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
