
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான போராட்டமானது அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்தது.
இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதேபோன்று அரசாங்கம் புதிதாகக் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம் வேண்டாம் என்று கூறியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
