
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே இலங்கையில் இல்லாத நிலையில் எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே சாலே பயன்படுத்திய கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள், மின்னஞ்சல் தகவல்கள் மற்றும் அவரது வங்கி கணக்குகளை விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குச் சதி செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஸ் சாலே நேற்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நேற்று காலை பணிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரைத் தொடர்ந்து தடுத்து வைக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளனர்.
சுரேஸ் சலேயின் கைதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் சில முக்கிய மற்றும் பலம்வாய்ந்த நபர்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சுரேஸ் சாலே கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கர்தினாலையும், கத்தோலிக்க திருச்சபையையும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையாகவே சுரேஸ் சாலே கைதினை நான் கருதுகிறேன். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இ ஏமாற்று வேலை மேற்கொள்ளப்படுகிறது.
சுரேஸ் சாலே 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றினார். 2019 ஜனவரி 3ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் வரை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இருந்தார். அதாவது, அவர் இலங்கையில் இருக்கவில்லை.
அப்படியானால், இலங்கையில் இல்லாத சுரேஸ் சலே எப்படி சஹ்ரானை சந்திக்க முடியும்? இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா என்ற கேள்வி எழுகிறது. அப்படிப்பட்ட உளவு அளவிலான நபர்கள் இலங்கையில் இருப்பதாக யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
