வல்வெட்டித்துறையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் இல்லத்தின், காணியின் மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
“தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு” என குறிப்பிட்டு , அவர் வசித்த வீட்டின் படம் அந்த பதாகையில் இருந்த நிலையில் அதனை கிழித்துள்ளனர்
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டார். அதன் பின்னரே குறித்த பதாகை கிழிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.
புவியியல் காண்
