4 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கிய இளையோர்கள்..
யேர்மனியில் பிறந்தவர்களின் மனிதநேய உதவி..
செல்வி யூலியா, செல்வி அன்னா கிறிஸ்ரி அமலதாசன்.

தாயகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற சிறார்கள், மற்றும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த இரு இளம் பிள்ளைகள் நான்கு லட்சம் ரூபாவை (4.00.000-00) மனிதநேய உதவியாக வழங்கியுள்ளனர் என்பதை நன்றியோடு அறியத்தருகின்றோம்.
மண் சஞ்சிகை வெளிவரும் யேர்மனி – டியூஸ்பேர் நகரில் வசித்த திரு , திருமதி அமலதாசன் – வசந்தி தம்பதிகளின் இந்த இரு பிள்ளைகளும் டியூஸ்பேர்க் நகரில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்த உதவியை வழங்கிய இக்குடும்பத்தவர்கள் நீண்டகாலம் யேர்மனியில் வாழ்ந்து, பின்னர் புலம்பெயர்ந்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இரு செல்விகளும் ஆரம்பக் கல்வியை யேர்மனியில் முடித்து உயர்கல்வி பட்டப் படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளனர் என்பது சிறப்பான விடயமாகும்.
செல்வி யூலியா கிறிஸ்ரி அமலதாசன்…( கலியாண நிட்சயார்த்தம் )
இவர் இங்கிலாந்தில் பட்டப்படிப்பை முடித்து அரசதுறையில் கடமைபுரிகின்றார். தனது திருமணம் நிட்சயிக்கப்பட்டதை மகிழ்வோடு தெரிவித்ததோடு தாயகத்தின் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இரண்டு லட்சம் ரூபாவை (2.00.000-00) மகிழ்வோடு எமக்கு அனுப்பி வைத்தார். மிக்க நன்றிகள்..
செல்வி அன்னா கிறிஸ்ரி அமலதாசன்… ( முதல்ச்சம்பளம் )
இவரும் இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்று தற்போது வேலை ஒன்றைப் பெற்றுள்ளார். அதாவது தனக்குக் கிடைத்த முதல் சம்பளத்தில் (2.00.000-00) இரண்டு லட்சம் ரூபாவை மகிழ்வோடு எமக்கு அனுப்பி வைத்தார். மிக்க நன்றிகள்..
இந்த நான்கு லட்சம் ரூபாவும் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி-துணுக்காயிலுள்ள ‘ஒளிரும் வாழ்வகத்தால்’ பராமரிக்கப்படும் மாற்றுத்திறனாளிப் பிள்ளைகள், ஆதரவற்ற பிள்ளைகள், மற்றம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பிள்ளைகள் என (10) பத்துப் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக மண் சஞ்சிகையினரால் இம்மாதம் 12.02.2026 திகதியில் அனுப்பி வைக்கப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.
இக்குடும்பத்தவர்கள் யேர்மனியில் வாழ்ந்த காலத்திலும் பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் எம்மோடு தொடர்பில் இருந்து பல தடவைகள் இப்படியான மனிதநேய உதவிகளைச் செய்துவரும் நல்ல உள்ளங்கள். இக்குடும்பத்தவர்களின் இந்த மனிதநேயப் பணிக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.. பிள்ளைகள் கல்விச் செல்வத்தில் இன்னும் உயர்ந்து, உழைத்து, பண்போடும் அன்போடும் வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்…
புலம் பெயர் நாடுகளில் வாழும் இளையோர்களே.. பெற்றோர்களே.. நலன்விரும்பிகளே.. மனிதநேயம் படைத்தவர்களே.. இப்பிள்ளைகளின் முன்மாதிரியான செயற்பாட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்..
இவர்களைப் போல நீங்களும் இப்படியான உதவிகளைச் செய்யும்பொழுது தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் வறிய மாணவர்களுக்கு உதவலாம்..’ சிறு துளி பெரு வெள்ளம் ‘ விரும்பியவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அன்பு உறவுகளே!..
” ஆண்டவனை கைகூப்பி வணங்கும் கைகளைவிட ஏழைகளுக்குக் கொடுக்கும் கைகளையே ஆண்டவன் விரும்புகின்றான் ”
நன்றிகள்!…
ஆசிரியர் – மண் சஞ்சிகை – யேர்மனி – 26.02.2026
