வட,கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வொன்றை பெறும் நோக்கில் பேச்சுக்களை நடத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து நாளையதினம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, சிறிதரன் அனுப்பிய கடிகதத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் உள்ள அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் அவசரமாகத் தங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட விரும்புகின்றோம்.
