சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை என்றும், பல சிறுமிகள் பாதிக்கப்பட்டு இந்த விவகாரத்தை வைத்து கீழ்த்தனமான, இழிவான அரசியல் செய்வதை ஆளும் கட்சியினர் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
