மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துள்ளார். அஞ்சலி குறிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பயண வழிமுறைகள் வேறாக இருப்பினும் அரசியல் களத்தில் நட்பு நீடித்ததாகவும் மற்றும் உடல் நலத்துடன் மீள்வார் என்ற நம்பிக்கையை அவரது இழப்பு உடைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
