பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனத் தெரிவிக்க்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்த மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மேலும் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் துபாயில் கைதாகி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஷிரான் பாஸிக்கின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்புகள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
