ஈரான் அரசாங்கத்திற்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்புவதற்கும் எதிர்மறையான சூழலை உருவாக்குவதற்கும் எதிராக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனடிப்படையில் போர்ச் சூழலில் எதிரிகளின் பிரச்சாரங்கள் அரசின் உறுதியை பலவீனப்படுத்தாது எனவும் மற்றும் ஆயுதப் படைகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
