மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் சமூகத்திற்குப் பேரிழப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
