ஊர்ப் பக்கம்
போக முடியவில்லை
ஊரே மாறிப்போய்
பேய்காடாய்க் கிடக்கிறது.
மனிதத்துவம் அது
மரித்து மாதம் பலவோ?
மரியாதை உணர்வு
மரணித்துப் போச்சோ?
ஈராயித்து ஒன்பதில்
கொடும்போர் அங்கே
நடந்த போதும் கூட
உயிருக்கு மதிப்பிருந்தது.
விபத்தில் காயத்தோடு
உறவொன்று அங்கே
நிலம் கிடந்திட – பலர்
படம் எடுக்கும் வேடிக்கை.
மூத்தோர் முகம்சுழிக்க
இளையோர் நடப்பு.
மூதறிதல் எல்லாம்
மலையேறிப் போயாச்சோ?
மண்பாசத்தோடு தான்
தாயகம் போயின்
மனம் வெறுத்தொதுங்கி
மீண்டு வரும் நிலை.
வரலாற்றை மறந்து
திரிந்த வரலாற்றை;
போற்றி புகழும் தமிழர்
தாயகத்தில் வாழ்ந்திட,
காலம் கடந்த போரில்
வீழ்ந்த மானமாவீரரவர்
தியாகத்தின் பயன்
வீணோ என்றேங்கம்.
உழைத்திட உடல்
அது கொண்டு வியர்வை
நிலம் சிந்தினும் பார்
உணர்வு இழத்தல் தகுமோ?
ஈழத்தமிழினம் ஒரு
காரிருள் பாதையில்
தன்திறன் விட்டேகி தூரம்
தொலைகிறதோ காணேன்.
எது எப்படி நடப்பினும்
நடப்பதில் இயல்பை
மாற்றிடல் தகுமோ?
ஈழத்தமிழ் உணர்வை.
…….. அன்புடன் நதுநசி.
