ஜனநாயகக் கட்சியினர், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டின் கட்டுப்பாட்டையும் ஒரு மகத்தான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.
இந்த வெற்றி மூலம் அமெரிக் அதிபர் டொனால் டிரம்பின் பதவிக்காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளைக் கட்டுப்படுத்தும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வென்றுள்ளனர்.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக டிரம்ப் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையிடம் கூறினார். இதன் மூலம், அவர் தேர்தல் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வாரா என்பது குறித்த கேள்விகளுக்கு தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.மேலும், ஃபாக்ஸ் நியூஸ் உடனான ஒரு நேர்காணலில், குடியரசுக் கட்சியின் தோல்விகளை தனக்கு எதிரான தாக்குதலாக தாம் கருதவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் செனட் வெற்றிகள்: மிச்சிகன் செனட் இடத்தை அப்துல் எல்-சயீத் வெல்வார் என சிஎன்என் கணித்துள்ளது. இதன் மூலம் அவர் அமெரிக்க வரலாற்றில் முதல் முஸ்லிம் செனட்டர் ஆவார் . ஓஹியோ, அயோவா, தென் கரோலினா, மெய்ன், வட கரோலினா, கேன்சஸ் மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மேலும் ஏழு செனட் இடங்களை ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றியுள்ளனர்.
செனட்டில் ஜனாநாயகக் கட்சி 54 இடங்கைளும் குடியரசுக்கட்சி 43 இடங்களையும் பெற்றது.
காங்கிரசில் (கவுஸ்) ஜனநாயகக்கட்சி 228 இடங்களையும் குடியரசுக்கட்சி 136 இடங்களையும் பெற்றது.
ஆளுநர் தோ்வில் ஜனநாயகக்கட்சி 26 இடங்களையும் குடியரசுக்கட்சி 18 இடங்களையும் பெற்றது.
