கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியிலுள்ள தொடருந்து பாதையில் தண்டவாளங்களைப் பாதுகாப்பாகப் பொருத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இரும்பு ஆணிகள் இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்டுள்ளன. தொடருந்து போக்குவரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தொடருந்து திணைக்கள பாதுகாப்புப் பிரிவினரும் கிளிநொச்சி காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
