விழ விழ மீண்டெழும் தமிழினிம் மாவீரர் செல்வங்ளிற்கு தடைகளை தாண்டி தாயகமெங்கும் நினைவேந்தல்களை முன்னெடுத்துவருகின்றது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் சனிக்கிழமை உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நடந்து வருகின்றது
வடமராட்சி, தென்மராட்சி, வலிக்காமம் மற்றும் தீவகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தற்காலிக மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக மாணவர்கள் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
வடமராட்சிப் பகுதியில், முதல் மாவீரரான சங்கரின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள இல்லத்தின் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீருவிலில் அமைந்திருந்த மாவீரர் சதுக்கத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வலி.தெற்கு பிரதேச சபை முன்றலிலும், வலி.வடக்கு தெல்லிப்பழை சந்திக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுவருகின்றன.
அத்துடன், எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாளன்று, மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் நினைவாலயங்கள் என அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாலை 06.05 மணிக்கு நினைவு மணி ஒலிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்படவுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் (செ. சத்தியநாதன்) வீரச்சாவடைந்த நவம்பர் 27ஆம் திகதியை முன்னிட்டு, நவம்பர் 21 முதல் 27 வரையான காலப்பகுதி ‘மா*வீரர் வாரமாக’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
