நூலகங்களுக்கிடையிலான தேசிய மட்டப்போட்டியில் ஒரே நேரத்தில் மூன்று விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது பூநகரி பிரதேசசபை.
2025ஆம் ஆண்டு நூலகங்களுக்கிடையிலான தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளைச் சிறப்பாக முன்னெடுத்தமைக்காக, பூநகரி பிரதேசசபையின் மூன்று பொது நூலகங்களிற்கு தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் இன்று வெள்ளிக்கிழமை தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பூநகரி பிரதேசசபையின் வாடியடி , பல்லவராயன்கட்டு மற்றும் இரணைமாதா நகர் நூலகங்களிற்கு ஒரே தடவையில் மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இவ்விருதை இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் நூலகங்களின் நூலகர்கள் பலத்த கரகோசங்களின் மத்தியில் பெற்றுள்ளனர்.
இலங்கையில் ஒரே தடவையில் மூன்று நூலகங்கள் விருதைப்பெற்றிருந்த ஒரேயொரு தமிழ் பிரதேசசபையாக பூநகரி பிரதேசசபை இம்முறை சாதித்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டில் தேசிய ரீதியில் இரு நூலகங்கள் விருதை பெற்றிருந்த நிலையில் இம்முறை மூன்றாவது நூலகமும் இணைந்து கொண்டுள்ளமைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
