டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என ஈரானின் உச்ச பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஈரான் முன்வைத்துள்ள ஏழு நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்றும் மற்றும் எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
