அமெரிக்கா\இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் தவறைச் செய்தால் ஈரானின் பதிலடி கொடூரமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும் என ஈரானிய புரட்சிகர காவல் படையின் பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி எச்சரித்துள்ளார். ஈரானிய படைகள் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாகவும் பல ஆண்டுகளுக்குப் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் எதிரிகளுக்கு உதவும் பிராந்திய தளங்களும் ஈரானின் இலக்குகளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
