பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஈரான் மீதான தாக்குதல் சாத்தியமற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு வலுவான ஒப்பந்தம் செய்தால் மட்டுமே இராணுவ நடவடிக்கை தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அமெரிக்கத் தாக்குதலால் ஈரானின் 10% ஏவுகணை மற்றும் 15% ட்ரோன் திறன் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் உரிமை கோரியுள்ளார்.
