ஜெயந்தி ஐயா அவர்களின் சிறப்பு: இந்து சமுத்திரத்தின் முத்தாய், தமிழ், வேதம், ஒழுக்கம் என அனைத்தும் தன்னிக்கே கொண்ட இலங்கா புரியின் குபேர பூமி யின் சொர்க்க பூமியின் வரலாற்றுப் பெரும் காவியம் சொன்ன யாழ் மட்டுவில் பெற்றெடுத்த பெரும் தவ புதல்வனாய் உதித்த வெற்றியின் நாயகன் எங்கள் ஜெயந்தி ஐயா.
துர்கா பூஜா துறந்தரர்: துர்கா பூஜா துறந்தரர் என்ற சொல் உமக்கே பொருந்தும் மட்டுவில் செல்ல பிள்ளையார் ஆசி பெற்ற ஜெயந்தி நாதா.
ஜெர்மனி குடியேற்றம் மற்றும் சேவை: ஐரோப்பா கண்டத்தில் ஜெர்மனி திரு நாட்டில் கவெற்றா மா நகரில் கால் பதித்து இன்றுடன் ஆண்டுகள் 38 அன்னையவள் துர்கா தேவி தத்தெடுத்த ஓர் மகனாய் இன்றும் அதே ஆவலுடன் அழகு பார்க்கிறார் அதே ஜெயந்தி ஐயா.
அம்பாளின் அருள்: யாருக்கு கிடைக்கும். இந்தப் பெரும் பாக்கியம், அம்பாள் ஞான பால் கொடுத்த சம்பந்தர் போல் தான் நீங்களும் இவ் ஆலயத்தின் அம்பாளும். மட்டுவில் எமக்கு அளித்த பொக்கிஷம் நீர் துர்கா அம்பாளுக்கு ஆலயம் அமைத்து இன்றுடன் 40 ஆண்டுகள் அதில் 38 ஆண்டுகள் அம்பாளுக்கு சேவை செய்வது உமக்கு கிடைத்த பாக்கியமும் நீங்கள் எங்களுக்கு கிடைத்ததும ஒரு பாக்யமே.
வாழ்க்கை மற்றும் பக்தி: வாழையடி வாழையாக உங்களுக்கு பிறக்கும் உங்கள் பிள்ளைகள் என்று அழகு பார்க்கும் அம்பாலும் இந்த ஊர் மக்களும். தாயை போல் அல்ல அவள் உங்களுக்கு தாய் தான் அதனால் தான் எத்தனை இடர் பாடுகள் வந்தாலும் அவள் உங்களை விடுவதில்லை நீங்களும் அவளை விடுவதில்லை.
இறை ஈடுபாடு: யாரும் இல்லாத நேரத்தில் அம்பாளும் நீங்களும் கதைப்பதை கதையாய் சொல்லும் ஊர் மக்களும் உண்டு. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் ஒரே கோவில் ஒரே அம்பாள் தேவியின் வெற்றி நாயகன் ஜெயந்தி ஐயா நீwir வாழியர்.
வாழ்த்து: நூற்றாண்டு கண்டு மனம் மகந்து பணிவன்புடன் தேவியின் புகழோடு வாழ்க வாழ்க வாழ்க.

