திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டே குறித்த மூவரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மூவரும் தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
