மன்னார் பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது சபையை இடைநடுவே ஒத்திவைத்து தவிசாளர் ஏ.ஜே. எம். ஜப்ரான் வெளியேறியுள்ளார். இதனடிப்படையில் 22 உறுப்பினர்களில் எட்டு பேர் வாக்களித்துக்கொண்டிருந்த நிலையில், இருவர் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து தவிசாளர் சபையை ஒத்திவைத்துச் சென்றமைக்கு சபை உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
