வாரண்டோர்வ் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
வாரண்டோர்வ் தமிழாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு
ஜெர்மனியின் வாரண்டோர்வ் (Warendorf) நகரில் இயங்கிவரும் வாரண்டோர்வ் தமிழாலயத்தில், தமிழீழ விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழாலய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி மாவீரர்களுக்கு வீரவணக்கமும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் நினைவேந்தல் உரைகள், கவிதைகள் மற்றும் உணர்வுபூர்வமான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
