யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜேசுராஜா சயந்தராஜ் (சயந்தன்) என்பவர் விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளாகப் பெரிதும் காதலித்து வந்த நபர் ஏமாற்றியமையால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சலே இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் வாழ்ந்த ஒரு இளைஞனின் இந்த அகால மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
