லண்டனில் நடைபெற்ற ‘Le Mans Cup’ சிற்றூந்து பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, அஜித் பங்கேற்ற பந்தய சிற்றூந்தின் மாதிரி பொம்மை ஒன்றை விஜய் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
அதில், “பிரியமுடன் விஜய் – To My Lovely Brother Ajith” என தனது கையெழுத்துடன் குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அஜித் பயன்படுத்தும் பந்தய சிற்றூந்தை பார்வையிட்ட விஜய், அவரது பந்தய உடையையும் பாராட்டியதுடன், போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
விஜய்–அஜித் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவருக்கும் இடையேயான அன்பும் நட்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
